Published:Updated:

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதே சிறப்பு: பசில் ராஜபக்‌ச

கொழும்பு: இலங்கை ராணுவத்தினர் சீனா உள்ளிட்ட நாடுகளில் ராணுவப் பயிற்சி எடுத்துக்  கொள்வதைவிட, இந்தியாவில் ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதே சிறப்பானது  என்று இலங்கை பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

இல்ங்கை வந்துள்ள இந்திய பத்திரிகையாளர்களுக்கு இன்று கொழும்பில் பேட்டியளித்தார்  பசில் ராஜபக்ச.அப்போது தமிழ்நாட்டில் இலங்கை ராணுவத்தினர் பயிற்சி எடுத்துக்  கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில்  பக்தி சுற்றுலா மேற்கொண்டபோது தமிழகத்தில் உள்ள கட்சியினரால் தாக்கப்பட்டதற்கும்  தமது கண்டனத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள நட்புறவுக்கு மிக  நீண்ட வரலாறு உள்ளது என்றும்,சீனாவில் பயிற்சி பெறுவதைவிட இந்தியாவிலோ  அல்லது பாகிஸ்தானிலோ இலங்கை ராணுவத்தினர் பயிற்சி மேற்கொள்வது சிறப்பாக  இருக்கும் என்றும் கூறினார்.