

ஸ்டாக்ஹோம்: 2012 ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு

ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக்குழு தலைவர் ஜார்க்லேண்ட் அறிவித்தார். ஐரோப்பிய கண்டம் முழுவதும் அமைதி மற்றும் சமரசம் ஏற்பட பாடுபட்டதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது,இந்த ஒன்றியத்தில் உள்ள நாடுகள் இணைந்து திறம்பட சமாளித்து,பொருளாதார ரீதியாக ஐரோப்பிய கண்டத்தை ஒருங்கிணைத்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.