Published:Updated:

மெக்காவில் தீ விபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம்!

மெக்காவில் தீ விபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம்!
மெக்காவில் தீ விபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம்!
மெக்காவில் தீ விபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம்!

ஜெட்டா:  ஹஜ் பயணிகள் தங்கியிருந்த 9 அடுக்கு மாடியில் நடந்த தீவிபத்தில் 13 ஹஜ் பயணிகள் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கு ஹஜ் பயணிகள் தங்கியிருந்த 9 அடுக்கு மாடியில் நேற்று முன் தினம் மாலை திடீரென தீப்பிடித்தது.

4-வது மாடியில் பிடித்த தீ மளமளவென பரவியது. உடனே தீயணைப்பு வீரர்களின் 10 படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ பிடித்த 4-வது மாடியில் இந்தியர்களும், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களும் தங்கியிருந்தனர். தீ பிடித்த தகவல் அறிந்ததம் அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இருந்தும் இந்த விபத்தில் 13 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தீ விபத்தில் இருந்து 139 பயணிகள் காப்பாற்றப்பட்டதாக சவுதி அரேபியா சிவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.