Published:Updated:

விடுதலைபுலிகளின் 20 ஆயிரம் கோடி எங்கே?: கேள்வி கேட்கிறது இலங்கை எதிர்கட்சி!

விடுதலைபுலிகளின் 20 ஆயிரம் கோடி எங்கே?: கேள்வி கேட்கிறது இலங்கை எதிர்கட்சி!
விடுதலைபுலிகளின் 20 ஆயிரம் கோடி எங்கே?: கேள்வி கேட்கிறது இலங்கை எதிர்கட்சி!
விடுதலைபுலிகளின் 20 ஆயிரம் கோடி எங்கே?: கேள்வி கேட்கிறது இலங்கை எதிர்கட்சி!

கொழும்பு: விடுதலை புலிகளிடம் உள்ள ரூ. 20 ஆயிரம் கோடி பணம், கப்பல்கள் என்ன ஆனது என்று இலங்கை அரசின் எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கையின் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ச அத்தநாயக கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய நீதிமன்றத்தால் சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை கொல்ல ஆயுதம் வழங்கியவரை எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுதலை செய்திருப்பது நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை அரசு மீறியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி அவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்ட பாதுகாப்பு படையினரையும் இது அவமதிக்கும் செயலாகும்.

விடுதலை புலிகளிடம் உள்ள ரூ. 20 ஆயிரம் கோடி பணம், கப்பல்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசுடமையாக்கி, அந்த நிதியை கொண்டு வருவதே தமது நோக்கம் என குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட போது இலங்கை அரசு கூறியது. ஆனால், குமரன் பத்மநாதனின் ரூ. 20 ஆயிரம் கோடி நிதி மற்றும் சொத்துக்கள் என்ன ஆனது? என்று தெரியவில்லை. இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு திஸ்ச அத்த நாயக தெரிவித்தார்.