Published:Updated:

ஆப்கானில் தற்கொலை தாக்குதல்: 32 பேர் பலி

விகடன் விமர்சனக்குழு

காபூல்:ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர்  பலியாயினர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மயாமனா மசூதியில் இன்று பக்ரீத்  பண்டிகையின் முதல் நாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அப்போது போலீஸ் உடையில் அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன்,  தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.இதில் 32 பேர்  பலியாயினர்.இதில் 17 பேர் சிவிலியன்கள் மற்றும் 15 பேர் போலீசார் ஆவர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும்,  ஹமீது கர்சாய் தலைமையிலான அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில்  தாலிபான்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.