Published:Updated:

`தாய் கூறிய ஒரு வார்த்தை...' - உறவினருக்காக 1,000 கி.மீ தன்னந்தனியாகப் பயணித்த உக்ரைன் சிறுவன்!

சிறுவன் ( சித்திரிப்புப் படம் )

உறவினர் ஒருவரை கவனித்துக்கொள்வதற்காக 1,000 கிலோமீட்டர் தன்னந்தனியாக, போர்ச் சூழலில் சிறுவன் பயணம் செய்த நிகழ்வு பலருக்கும் அதிர்ச்சியுடன்கூடிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`தாய் கூறிய ஒரு வார்த்தை...' - உறவினருக்காக 1,000 கி.மீ தன்னந்தனியாகப் பயணித்த உக்ரைன் சிறுவன்!

உறவினர் ஒருவரை கவனித்துக்கொள்வதற்காக 1,000 கிலோமீட்டர் தன்னந்தனியாக, போர்ச் சூழலில் சிறுவன் பயணம் செய்த நிகழ்வு பலருக்கும் அதிர்ச்சியுடன்கூடிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சிறுவன் ( சித்திரிப்புப் படம் )

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 12-வது நாளாக போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. போர்ப் பதற்றம் காரணமாக உக்ரைன் மக்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். ரஷ்யப் படைகள் தங்கள் தாங்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் வேளையில், 11 வயது சிறுவன் ஒருவன், தன் தாய் கூறியதால், உறவினர் ஒருவரை கவனித்துக்கொள்வதற்காக 1,000 கிலோமீட்டர் தன்னந்தனியாக, போர்ச் சூழலில் பயணம் செய்த நிகழ்வு பலருக்கும் அதிர்ச்சியுடன்கூடிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படையினரால் கைப்பற்றப்பட்ட மின் உற்பத்தித் தளம் அமைந்துள்ள பகுதியான ஜபோரிஜியாவை சேர்ந்த அந்தச் சிறுவன், தன்னுடைய உறவினரை கவனித்துக்கொள்வதற்காக 1,000 கிலோமீட்டர் தன்னந்தனியாக ரயில் மூலம் ஸ்லோவாக்கியாவுக்குப் பயணம் செய்திருக்கிறான்.

சிறுவன்
சிறுவன்
சித்திரிப்புப் படம்

ஸ்லோவாக்கியாவைச் சென்றடைந்த அந்தச் சிறுவனை அங்குள்ள தன்னார்வலர்கள் உணவு வழங்கி கவனித்ததாகவும், பின்னர் ஸ்லோவாக்கியா உள்துறை அமைச்சகம் அவரின் உறவினரைத் தொடர்புகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்லோவாக்கிய உள்துறை அமைச்சக அதிகாரிகள், ``இந்த 11 வயது சிறுவனின் தாய், தன்னுடைய நோய்வாய்ப்பட்ட உறவினரைக் கவனித்துக்கொள்ளச் செல்லுமாறு, இந்த சிறுவனிடத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பை, பாஸ்போர்ட், கையில் ஒரு போன் நம்பர் மற்றும் துண்டுக் காகிதத்துடன் ஸ்லோவாக்கியாவுக்கு ரயிலில் தனியாக அனுப்பிவைத்திருக்கிறார்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுவன்
சிறுவன்
சித்தரிப்புப் படம்

இந்த நிலையில், ஸ்லோவாக்கியா உள்துறை அமைச்சகம் இந்தச் சிறுவனைப் பாராட்டி, ``நேற்றைய இரவின் மிகப்பெரிய ஹீரோ. ஓர் அசாதாரண பயணத்துக்குப் பிறகு அச்சமின்மை, புன்னகை, உறுதி, ஹீரோவுக்கான தகுதி ஆகியவை மூலம் அனைத்தையும் வென்றிருக்கிறான்" என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism