Published:Updated:

ரோம்னியுடன் இணைந்து செயல்பட விருப்பம்!: ஒபாமா பேச்சு

ரோம்னியுடன் இணைந்து செயல்பட விருப்பம்!: ஒபாமா பேச்சு
ரோம்னியுடன் இணைந்து செயல்பட விருப்பம்!: ஒபாமா பேச்சு
ரோம்னியுடன் இணைந்து செயல்பட விருப்பம்!: ஒபாமா பேச்சு

அமெரிக்கா: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ரோம்னியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ஒபாமா சிகாகோவில் உரை நிகழ்த்தினார்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா தனது உரையில்'அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது. அமெரிக்க குடும்பமான நாம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றாக பாடுபடுவோம்.நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ரோம்னியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.

தேர்தலில் எனக்கும் ரோம்னிக்கும் வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வேலைக்காக போராடும் சூழல் இல்லாத நாடாக அமெரிக்காவை உருவாக்குவோம். அமெரிக்க குழந்தைகள் கடன்சுமை இல்லாத எதிர்காலத்தில் வாழ வேண்டும். எனது வெற்றி அமெரிக்கர்களின் வெற்றி' என்று கூறியுள்ளார்.