Published:Updated:

இலங்கை வெலிக்கடை சிறையில் மோதல்:16 பேர் பலி

இலங்கை வெலிக்கடை சிறையில் மோதல்:16 பேர் பலி
இலங்கை வெலிக்கடை சிறையில் மோதல்:16 பேர் பலி
இலங்கை வெலிக்கடை சிறையில் மோதல்:16 பேர் பலி

கொழும்பு: இலங்கை வெலிக்கடைச் சிறையில் கைதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறைக்குள் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து,
சிறைச்சாலையை சோதனை செய்ய சென்ற விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது 16 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர்.

அதே சமயம் சிறையின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி சிறைக்கைதிகளும் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும்,கல்வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், இதில் கட்டளை அதிகாரி உள்ளிட்ட 11 பேர் அதிரடிப்படையினர் தரப்பில் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

##~~##
இதற்கிடையே, இந்த சம்பவத்தின்போது சிறை உடைக்கப்பட்டதாகவும் சிறைக்கைதிகள் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.இதனால் பல இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மோதல் சம்பவத்தால் பதற்றம் நிலவுவதையடுத்து, வெலிக்கடைச் சிறையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில் தமிழர் உட்பட 33 இந்தியர்கள் உள்ளனர்.
கடந்த 1983 ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது, வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தமிழ்க்கைதிகள் கொல்லப்பட்டனர்.கடந்த 2010ம் ஆண்டு இந்தச் சிறையில் ஏற்பட்ட மோதலில் 40 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.