Published:Updated:

இலங்கை போர்: ஐ.நா. மீது ஆய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு!

இலங்கை போர்: ஐ.நா. மீது ஆய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு!
இலங்கை போர்: ஐ.நா. மீது ஆய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு!
இலங்கை போர்: ஐ.நா. மீது ஆய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு!

ஐ.நா.: இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா சபை மோசமாகத் தவறியுள்ளது என்று ஐ.நா.வுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது.

தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐ.நா கைவிட்டிருந்தது என்று இந்த அறிக்கை முடிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல,மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் கொழும்பில் பணியாற்றிய ஐ.நா. பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ,அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது.

இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தப் பிரதேசத்துக்குள்ளிருந்து வெளியேற முடியாமல் ஒரு சிறு இடத்தில் பொதுமக்கள் சிக்கியிருந்தனர். செப்டம்பர் 2008ல், ஐ.நா.தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கிலுள்ள யுத்த பகுதிகளிலிருந்து விலக்கிக்கொண்டிருந்தது.

##~~##
ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து அது இம்முடிவை எடுத்திருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஐ.நா. எப்போதும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே இல்லை என்றும், ஐ.நா. அந்த இடத்திலிருந்து விலகியதால் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்படுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதென்று இந்த அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் மிக மோசமான, ஒரு பெருந்துயர சூழல் நிலவியதாக ஐ.நா. வின் இந்த அறிக்கை கூறுகிறது.
பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுப்பதற்கு முயல வேண்டும் என்பதை கொழும்பிலுள்ள மூத்த ஐ.நா. அதிகாரிகள் தங்களது பொறுப்பாகவே கருதியிருக்கவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையக அதிகாரிகளும் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையோ,மாற்று உத்தரவுகளையோ வழங்கியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்துள்ளது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம் தெளிவாக கணக்கிட்டு வருகிறது. ஐ.நா. என்று அதுவே கூறினாலும், அந்த விவரங்களை ஐ.நா. பிரசுரிக்கத் தவறியது என்பதையும் இந்த அறிக்கை விவரமாக எடுத்துரைக்கிறது.
மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்குக் காரணம் அரச படையினரின் ஷெல் தாக்குதல்தான் என்பதை இலங்கை அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐ.நா. தெளிவுபடுத்தியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.
ஐ.நா. கட்டமைப்புக்குள் ஒரு விஷயத்துக்கு மாறாக இன்னொரு விஷயத்தை விட்டுக்கொடுப்பது என்ற ஒரு கலாசாரம் அதிகம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐநா பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர் என்று இது சுட்டிக்காட்டுகிறது.
ஐ.நா.வில் மூத்த அதிகாரியாக இருந்த எட்வர்ட் மோர்டிமர் தற்போது இலங்கையில் சமாதானத்துக்கும் நீதிக்குமான முன்னணி என்ற அமைப்புக்கு தலைமையேற்றுள்ளார்.
உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களை ஒரேயடியாக எதிர்த்துவிட முடியாது மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வேண்டும் என்பதற்காக இவர்களுடன் தொடர்பிலேயே இருந்துவர வேண்டும் என்ற அழுத்தம் ஐ.நா.வுக்கு இருப்பது, தார்மீக ரீதியில் சில தவறான முடிவுகளை ஐ.நா. எடுப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று மோர்டிமர் விளக்கினார்.
இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐ.நா. பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐ.நா. நிறுவனங்களோ ஒருமுறைகூட அதிகாரப்பூர்வமாகக் கூடியிருக்கவில்லை.
ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு எது தெரியவேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார்களோ அதனைத்தான் ஐ.நா. வெளியில் சொன்னது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.