Published:Updated:

பாக் ரயில்வே துறையை லாலுவிடம் ஒப்படையுங்கள்:பாக். எம்.பி.

பாக் ரயில்வே துறையை லாலுவிடம் ஒப்படையுங்கள்:பாக். எம்.பி.
பாக் ரயில்வே துறையை லாலுவிடம் ஒப்படையுங்கள்:பாக். எம்.பி.
பாக் ரயில்வே துறையை லாலுவிடம் ஒப்படையுங்கள்:பாக். எம்.பி.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசால் முடியவில்லை என்றால் ரயில்வே துறையை லாலு  பிரசாத்திடம் ஒப்படையுங்கள் என்று அந்நாட்டு எம்.பி. பேசியதால் நாடாளுமன்றத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே துறை  அமைச்சர், ரயில்வேயின் மோசமான நிலைமை குறித்து பேசினார்.

அப்போது எழுந்து பேசிய  முத்தாஹிதா குவாமி இயக்கம் என்ற கட்சியை சேர்ந்த எம்.பி. சஜித் அகமது, பாகிஸ்தான் அரசால் ரயில்வேயை  சரியாக நடத்த முடியவில்லை என்றால்,இந்தியாவின் முன்னாள் ரயில்வே அமைச்சர்  லாலு பிரசாத்திடம் ஒப்படையுங்கள் என்று கூறினார்.

இதனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.