Published:Updated:

உலகளவில் 2012-ல் 119 பத்திரிகையாளர்கள் படுகொலை

உலகளவில் 2012-ல் 119 பத்திரிகையாளர்கள் படுகொலை
உலகளவில் 2012-ல் 119 பத்திரிகையாளர்கள் படுகொலை
உலகளவில் 2012-ல் 119 பத்திரிகையாளர்கள் படுகொலை

வியன்னா: உலக அளவில் நடப்பு ஆண்டில் மட்டும் 119 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, ஊடக கண்காணிப்பு அமைப்பான இன்டர்நேஷனல் பிரஸ் இன்ஸ்டிட்யூட்டின் (ஐபிஐ) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் (1997-ல் இருந்து) இதுவே அதிகபட்ச எண்ணிக்கை என்பதை ஐபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2009-ல் 110 பத்திரிகையாளர்களும், கடந்த ஆண்டு 102 பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டதே இதுவரை உச்சபட்சமாக இருந்தது.

நடப்பு ஆண்டில் பத்திரிகையாளர்களை மிகுதியாக பலிகொண்ட நாடுகள் பட்டியலில் சிரியா முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டுக் கலவரம் நீடித்து வரும் அந்நாட்டில் மட்டும் 36 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, சோமாலியாவில் 16 பேர் பலியாகி உள்ளனர். மெக்சிகோ, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

தகவல்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்படுவது அதிகரித்து வருவதாக ஐபிஐ தெரிவித்துள்ளது.

மேலும், பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டு அரசின் கடமை என்றும், அதில் இருந்து எந்த அரசும் தவறக் கூடாது என்றும் ஊடக கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.