Published:Updated:

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் மீது ராணுவம் தாக்குதல்!

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் மீது ராணுவம் தாக்குதல்!
யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் மீது ராணுவம் தாக்குதல்!
யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் மீது ராணுவம் தாக்குதல்!

கொழும்பு: யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை  ராணுத்தினரும்,போலீசாரும் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் 7 மாணவர்கள்  படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவு நாளான நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும்,  மாணவர் விடுதிக்குள்ளும் படையினர் அத்துமீறி நுழைந்ததை எதிர்த்து மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாணவர்கள் மீது படையினரும்,போலீசாரும் இணைந்து  காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வாய்களை கறுப்பு துணியால்  கட்டிக்கொண்டு,ராணுவத்தின் அராஜகப் போக்கினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து,குறித்த போராட்டத்தை வீதியில்  நடத்த முற்பட்டபோது அங்கு  ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த பெருமளவு படையினரும், போலீசாரும் திடீரென  மாணவர்கள் மீது தடி, ரப்பர் வயர், கம்பி போன்றவற்றால் சுற்றிவளைத்து, தாக்குதல்  நடத்தினர்.

இதில் நிலைகுலைந்த மாணவர்கள் பெருமளவானோர் வளாகத்திற்குள் ஓடி விட, சிலரை  வீதியில் போட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இதன் பின்னர் 4 மாணவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

மேலும் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கு  பின்னர் அங்குவந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் படையினருடனும்,  போலீசாருடனும் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை மீட்டுச் சென்றனர்.

##~~##
தற்போது பல்கலைக்கழகம் அருகே போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதோடு,தொடர்ந்து  ராணுவம் குவிக்கப்படும் நிலையில்,அங்கு பதட்டமான சூழல் நிலவுவதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான  தாக்குதல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடருமானால் அது நாட்டுக்கு  நல்லதல்ல என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.