Published:Updated:

நார்வே: 7 வயது மகனை கண்டித்த இந்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை

நார்வே: 7 வயது மகனை கண்டித்த இந்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை
நார்வே: 7 வயது மகனை கண்டித்த இந்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை
நார்வே: 7 வயது மகனை கண்டித்த இந்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை

ஓஸ்லோ: ஏழு வயது மகனை கண்டித்ததற்காக, நார்வேயில் இந்தியப் பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது, இந்தியாவில் மட்டுமின்றி, நார்வேவில் வாழும் வெளிநாட்டினர் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நார்வேவில் வசிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சந்திரசேகர் வல்லபாநேனி மற்றும் அவரது மனைவி அனுபமா மீது கடந்த 26 ஆம் தேதி புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அதில், ஏழு வயது மகனின் நடவடிக்கைகள் சரியில்லாததால் சிறுவனை அவர்கள் கண்டித்ததாகவும், மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர் ஒருவரின் புகாரின் அடிப்படையில், அந்த இந்தியத் தம்பதியர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஏழு வயது மகனை துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவர்களைக் குற்றவாளிகள் என நார்வே நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

அந்தத் தீர்ப்பில், தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைதண்டனை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இவ்வழக்கில் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரசேகரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.