Published:Updated:

ஆதாரம் இல்லை: பாக். பிரதமரை கைது செய்ய அதிகாரிகள் மறுப்பு!

ஆதாரம் இல்லை: பாக். பிரதமரை கைது செய்ய அதிகாரிகள் மறுப்பு!
ஆதாரம் இல்லை: பாக். பிரதமரை கைது செய்ய அதிகாரிகள் மறுப்பு!
ஆதாரம் இல்லை: பாக். பிரதமரை கைது செய்ய அதிகாரிகள் மறுப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமரை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை  என்பதால்,அவரை கைது செய்ய இயலாது என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எரிசக்தி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் பிரதமர்  ராஜா பர்வேஸ் அஷ்ரப் உள்ளிட்ட 15 பேரை கைது செய்யுமாறு, பாகிஸ்தானின் ஊழல்  தடுப்புப் பிரிவின் தலைவர் பாஸிக் பொக்காரிக்கு கடந்த செவ்வாய்கிழமையன்று  பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான  சூழல் ஏற்பட்டது.

##~~##
இந்நிலையில்,  பொக்காரி இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத்  தாக்கல் செய்தார். அதில், பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரபை கைது செய்ய போதுமான  ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும்  இந்த வழக்கில் ஆரம்பக் கட்ட  விசாரணையே நடந்துள்ளது என்றும், எனவே பிரதமரை கைது செய்வது அவசியமா  என்பது குறித்து முடிவெடுக்க சிறிது கால அவகாசம் தேவை என்றும் அதில்  கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க  வேண்டும் என்றும், அதை ஆராய்ந்து குற்றத்திற்கான ஆதாரங்கள் உள்ளனவா என முடிவு  செய்யப்படும் என்றும்  பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி,   தெரிவித்துள்ளார்.