Published:Updated:

தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

விகடன் விமர்சனக்குழு
தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

சிகாகோ:  மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க சிகாகோ நகரில் வாழும் டேவிட் கோல்மேன் ஹெட்லி (52) லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையவர்.கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய பங்கு வகித்ததாக கூறி ஹெட்லியை ஒப்படைக்க கோரியது இந்தியா.

இந்நிலையில் மும்பை தாக்குதல் மட்டுமல்லாது மேலும் பல்வேறு வழக்குகள் காரணமாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லிக்கு எதிரான வழக்கு,சிகாகோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையின்போது தனக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என்றும், அப்படி ஒப்படைக்காமல் இருந்தால், இந்த வழக்கில் ஒத்துழைக்க தயார் என்றும் ஹெட்லி முன்பு நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

##~~##
இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் தீர்ப்பு வழங்கிய சிகாகோ நீதிமன்ற நீதிபதி ஹாரி டி லைனென் வெப்பர்,"மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு வழிவகுத்து கொடுத்து, தாஜ் ஹோட்டல் மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகியுள்ளது.
அதே சமயம் டேவிட் ஹெட்லி மேலும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்பதாலும், சதிச்செயலில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாலும்,மேற்பார்வையுடன் கூடிய 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது" என அறிவித்தார்.
இந்நிலையில், நியூயார்க் உலக வர்த்தக மையம் தாக்குதலுக்கு இணையாக இந்த மும்பை தாக்குதல் கருதப்படும் போது தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளாத அமெரிக்க வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த வழக்கில் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிகாகோ நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.