Published:Updated:

தமிழர் பகுதிகளில் ராணுவம் வாபஸ் இல்லை: இலங்கை திட்டவட்டம்

தமிழர் பகுதிகளில் ராணுவம் வாபஸ் இல்லை: இலங்கை திட்டவட்டம்
தமிழர் பகுதிகளில் ராணுவம் வாபஸ் இல்லை: இலங்கை திட்டவட்டம்
தமிழர் பகுதிகளில் ராணுவம் வாபஸ் இல்லை: இலங்கை திட்டவட்டம்

கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் வாபஸ் இல்லை என்று இலங்கை  ராணுவம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழர்  பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறுவாழ்வு மற்றும் மறு குடியத்தும்  பணிகள் சரிவர நடைபெறவில்லை.

இப்போது வரையிலும் முகாம்களிலும் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழும்தான் தமிழர்கள்  வாழுகிற அவல நிலை உள்ளது.தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்; தமிழர்களும்  சிங்களர்களைப்போல சம அதிகாரம், சுய கவுரவத்துடன் வாழ வேண்டும்; அதற்கு முதல்  படியாக தமிழர் பகுதிகளில் ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற  கோரிக்கைகள் அங்கு எழுந்துள்ளது.

##~~##
தமிழர் பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்களை திரும்பப்பெறுமாறு ‘போருக்குப் பிந்தைய  படிப்பினை, ஒற்றுமை ஏற்படுத்தும் குழு’ ராணுவத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால்,  இந்தக் கோரிக்கையை பரிசீலித்த ராணுவக் குழு, நிராகரித்துவிட்டது. தமிழர் பகுதிகளில்  பாதுகாப்புப் படை வீரர்களை விலக்கப்போவது இல்லை என்று முடிவு எடுத்து  இருக்கிறார்கள்.
'இலங்கைத் தீவில் எங்கெங்கு பாதுகாப்புத் தேவைகள் எழுந்துள்ளனவோ, அங்கே  தொடர்ந்து பாதுகாப்புப் படைகளை நிறுத்திவைக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது' என  இலங்கை ராணுவம் கூறி உள்ளது.