Published:Updated:

இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுப்பு!

விகடன் விமர்சனக்குழு
இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுப்பு!
இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுப்பு!
இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுப்பு!

வாஷிங்டன்: இலங்கை ராணுவ அதிகாரிக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா அனுமதி  மறுத்துள்ளது.

இலங்கை ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணிபுரியும் சுதானந்த ரனசிங்கேவுக்கு  அமெரிக்காவில் ராணுவ பயிற்சியளிக்க கோரப்பட்டிருந்த நிலையில், அந்நாடு அதற்கு  மறுப்பு தெரிவித்துள்ளது.

##~~##
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த செயலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜபக்சேவின் சகோதரரும், பாதுகாப்புத்துறை  செயலாளருமான கோதபய ராஜபக்சே, தவறான தகவல்களின் அடிப்படையில்  அமெரிக்கா, இலங்கை ராணுவ அதிகாரிக்கு அனுமதி மறுத்துள்ளதாகவும், அமெரிக்கா  மறுக்கும்பட்சத்தில், இலங்கை அதிகாரிகள், சீனா, இந்தியா அல்லது பாகிஸ்தான் போன்ற  நாடுகளில் ராணுவ பயிற்சி பெறுவர் என்றும் தெரிவித்துள்ளார்.