Published:Updated:

ட்விட்டர் தளம் 'ஹேக்' ; 2,50,000 பயனாளிகளின் தகவல்கள் திருட்டு!

Vikatan Correspondent
ட்விட்டர் தளம் 'ஹேக்' ;  2,50,000 பயனாளிகளின் தகவல்கள் திருட்டு!
ட்விட்டர் தளம் 'ஹேக்' ; 2,50,000 பயனாளிகளின் தகவல்கள் திருட்டு!
ட்விட்டர் தளம் 'ஹேக்' ;  2,50,000 பயனாளிகளின் தகவல்கள் திருட்டு!

சான்ஃபிரான்சிஸ்கோ: ட்விட்டர் தளம் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 2,50,000  பயனாளிகளைப் பற்றிய தகவல் திருடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்திலேயே ஹேக்கர்கள், ட்விட்டர் பயனாளிகளின் தகவல்களை  திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டதை கண்டறிந்ததும்,உடனே குறிப்பிட்ட 'பிளாக்' (  Blog)  ஒன்றை மூடியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

##~~##
அதே சமயம் ஹேக்கர்கள், சுமார் 250,000 பயனாளிகளின் யூசர் நேம் ( user name), இ  மெயில் முகவரிகள் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றை திருடியிருக்கலாம் என்றும்,  எனவே புதிய பாஸ்வேர்டுகளை உருவாக்கிக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தி  தாங்கள் இ மெயில் அனுப்பி உள்ளதாகவும் ட்விட்டர் தள நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஹேக்கர்கள் சாமான்யர்கள் அல்ல என்றும், நன்கு திறமை பெற்ற நவீன தொழில்  நுட்ப அறிவு கொண்ட குழுவினராக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் மேலும்  தெரிவித்துள்ளது.