Published:Updated:

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி பதவியேற்பு!

Vikatan Correspondent
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி பதவியேற்பு!
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி பதவியேற்பு!
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி பதவியேற்பு!

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக ஜான் கெர்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பராக் ஒபாமா தலைமையிலான முதலாவது அமைச்சரவையில் வெளியுறவுத் துறை  அமைச்சராக ஹிலார்ரி கிளிண்டன் பதவி வகித்தார். இந்நிலையில் சமீபத்தில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற ஒபாமா அமைச்சரவையில், ஜான் கெர்ரி-க்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் ஜான் கெர்ரிக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி எலெனா காகன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் ஜான் கெர்ரியின் குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இவர் அமெரிக்காவின் 68-வது வெளியுறவுத் துறை அமைச்சராவார்.