Published:Updated:
தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை கிடையாது: ராஜபக்சே திட்டவட்டம்


கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை கிடையாது என்று அந்ந்ட்டு அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினவிழா திரிகோணமலையில் நடந்தது. விழாவில் அந்நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்துப் பேசிய ராஜபக்சே, " விடுதலைப்புலிகள் இயக்கம் அகற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. தாய் நாட்டையும், நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாக்க போராடி வருகிறோம். தற்போது மிகவும் கடுமையான சூழ்நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுதந்திரத்தை காக்க வேண்டிய சவால்களும் அதிகரித்துள்ளன.
##~~## |
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் ஆன இறுதிகட்ட போர் முடிந்து விட்டது. அதில், இருந்து இங்கு அனைத்து சுமுதாய மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மைனாரிட்டி ஆக வாழும் தமிழர்களுக்கு வடக்கு பகுதியில் எந்தவிதமான அரசியல் தன்னாட்சி உரிமை வழங்கப்படமாட்டாது. அங்கு அவர்கள் ஒற்றுமையாக வாழும் பட்சத்தில் மத, இன வேறுபாடுகள் ஏற்படாது" என்றார்.