Published:Updated:

அப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்!

அப்சல்குரு  தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்!
அப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்!
அப்சல்குரு  தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்!

மும்பை: அப்சல்குருவுக்கு தூக்கிலிடப்பட்டதற்கு பழிக்கு பழிவாங்க தாக்குதல் நடத்துவோம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு நேற்று காலை தூக்கிலிடப்பட்டார். 

இந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்காக பழிக்கு பழி வாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தானில்  இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா என்பவர் பத்திரிகை அலுவலகம் ஒன்றை தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

##~~##
"அப்சல்குருவை தூக்கிலிட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.பழிக்குப் பழி வாங்குவோம்.இந்தியாவின் முக்கிய நகரங்களை தகர்ப்போம்.இந்தியா தன் செயலுக்கான விலையை கொடுத்தே தீரவேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மிரட்டலை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.