Published:Updated:

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியா மீது மாலத்தீவு குற்றச்சாட்டு!

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியா மீது மாலத்தீவு குற்றச்சாட்டு!
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியா மீது மாலத்தீவு குற்றச்சாட்டு!
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியா மீது மாலத்தீவு குற்றச்சாட்டு!

மாலே: மாலத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி நசீத், கைதாவதில் இருந்து தப்பிக்க   இந்தியத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தங்களது நாட்டு உள்விவகாரங்களில்   தலையிடுவதாக இந்தியா மீது, மாலத்தீவு குற்றம் சாட்டியுள்ளது.

மாலத்தீவுகளின் முன்னாள் அதிபர் நசீத், கைதாவதில் இருந்து தப்பிக்க நேற்று இந்தியத்  தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். செப்டம்பரில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில்  நசீதும் ஒரு வேட்பாளர் ஆவார்.

முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாரான அவரை சுதந்திரமாக தேர்தலில் பங்கேற்க  அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா நேற்று கருத்து தெரிவித்திருந்தது.

##~~##
இந்நிலையில், மாலத்தீவுகளின் ஜனநாயக முறையை இந்தியா குறைத்து  மதிப்பிடுவதாகவும், சுதந்திரமான நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும்  அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.
 
இதுதொடர்பாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"
இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் முன்னாள் ஜனாதிபதி முஹமத் நசீதின்(42)  கைது நடவடிக்கை குறித்து இந்தியா கருத்து வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது.
மாலத்தீவில் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி  தேர்தலில் எப்படிப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்று இந்தியா கருத்து  தெரிவித்தது மிகவும் மோசமானதாகும்.
 
மாலத்தீவின் தேர்தல் ஆணையம், சிறந்த வேட்பாளர்களைத் தீர்மானிப்பதிலும்  நம்பகத்தன்மையுடன் தேர்தலை நடத்துவதிலும் முழுத்திறமை கொண்டது" எனக்  கூறப்பட்டுள்ளது.