Published:Updated:

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூரக் கொலை! ( படங்கள் )

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூரக் கொலை! ( படங்கள் )
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூரக் கொலை! ( படங்கள் )

லண்டன்/கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்,இலங்கை ராணுவத்தினரால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அம்பலமாகி உள்ளது. 

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூரக் கொலை! ( படங்கள் )

இலங்கை ராணுவத்தின் போர்க் குற்ற கொடூரங்களை சேனல் 4தொலைக்காட்சி ஏற்கனவே பலமுறை அம்பலப்படுத்தி உள்ள நிலையில், தற்போது அத்தொலைக்காட்சியும், லண்டனிலிருந்து வெளியாகும் 'தி இன்டிபென்டன்ட்' - The Independent - என்ற நாளிதழும் முள்ளிவாய்க்காலில்  இறுதிநேரம் ந்டைபெற்ற மேலும் அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகளையும்,செய்திகளையும் வெளியிட்டுள்ளது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூரக் கொலை! ( படங்கள் )

இலங்கை ராணுவத்தின் பிடியில் இருக்கும் அந்த பால்மணம் மாறாத பாலகன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்.

சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் பதுங்கு குழி ஒன்றில்,இருத்தி வைக்கப்பட்டுள்ள அச்சிறுவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க வழங்கப்பட்டிருக்கின்றது.

##~~##
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுவன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. இலங்கை  ராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள் ராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு, அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.அதன் பின்னர் மீண்டும் இவரது உடலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் சடலம் காட்டப்படது. ஆனால் இப்போது இலங்கை ராணுவத்தினர் தமது வெற்றியின் கொண்டாட்ட விருதாக, இந்தச் சிறுவனைச் சுட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக நிரூபணம் ஆகியுள்ளது.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூரக் கொலை! ( படங்கள் )

இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. இது ராணுவத்தினரின் விருப்பத்தின் பேரில் ராணுவத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து படுகொலைகள் புரியும் துணைக் குழுக்களாலோ  மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாகும்.

கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள், ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்கப்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை ஆராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு  செய்துள்ளது.

கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக்,சடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன்  மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும்,குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாலச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும், அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தள்ளார்.

மேலும் அவர் இந்தப் படங்கள் எந்த விதமான மாற்ங்களுங்கோ ஏமாற்றுகளுக்கோ உட்படாதவை என்றும் படங்கள் நூறு சதவீதம் உண்மையானவை என்றும் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் எடுக்கப்பட்டுள்ள காணொளியும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசு ஏற்கனவே கூறுகையில் போரின் போது அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் மனித உரிமை செயலாளராக பான் கீமுன் இருந்தபோது அவர் அனுப்பிய குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்புகைப்படங்களால்,இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,வரும் நவம்பர் மாதம் பங்கு பெறுவதாக உள்ள உலகப் பொதுநலவாய மாநாட்டில் பங்கு கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.