Published:Updated:

கிரிக்கெட் மைதானத்தில் 8 பேரின் உயிரைப் பறித்த குண்டு வெடிப்பு சம்பவம்

கிரிக்கெட் மைதானத்தில் 8 பேரின் உயிரைப் பறித்த குண்டு வெடிப்பு சம்பவம்
கிரிக்கெட் மைதானத்தில் 8 பேரின் உயிரைப் பறித்த குண்டு வெடிப்பு சம்பவம்

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்தில் 8 பேரின் உயிரைப் பறித்த குண்டு வெடிப்பு சம்பவம்

ஆஃப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் உள்ள ஸ்பின்கர் மைதானத்தில் ரம்ஜான் கோப்பைக்கான சிறப்பு போட்டி கடந்த மே 18-ம் தேதி இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியை காண நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக மைதானத்தின் உள்ளே பெரும் சத்தத்துடன் இரண்டு குண்டுகள் வெடித்தது. அடுத்த சிறிது நேரத்தில் மைதானத்துக்கு வெளியிலும் இரண்டு குண்டுகள் வெடித்தது. இந்தப் குண்டு வெடிப்பினால் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜலாலாபாத் நகரின் துணை மேயர் மற்றும் போட்டியின் அமைப்பாளர் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்தில் 8 பேரின் உயிரைப் பறித்த குண்டு வெடிப்பு சம்பவம்

தகவல் அறிந்து சம்பவ இடதுக்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி பேசிய ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, “  புனிதமான ரம்ஜான் மாதத்தில் எம் மக்களைப் பயங்கரவாதிகள் கொல்வது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விளையாட்டு மைதானம் எனவும் பார்க்காமல் குண்டு வெடிப்பு நிகழ்த்தியுள்ளனர். இதிலிருந்து, பயங்கரவாதிகளுக்கு எந்தச் சமயமும் கிடையாது. அவர்கள் மனிதாபிமானத்துக்கு எதிரானவர்கள் மட்டுமே, என்பது நிரூபணமாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆஃகானிஸ்தான் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தச் தொடர்பும் இல்லை எனத் தாலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.