Published:Updated:

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு தொடக்கம்; யு.எஸ். தீர்மானத்தால் இலங்கைக்கு நெருக்கடி

ஜெனிவா: ஐ.நா. வின் மனித உரிமை கவுன்சில் மாநாடு இன்று ஜெனிவாவில்  தொடங்கியது. இம்மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பாக  தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது

ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் மாநாடு இன்று ஜெனிவாவில் தொடங்கியது.  இந்த  மாநாடு மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இலங்கையில்  நடைபெற்ற போர் குற்றம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா  திட்டமிட்டுள்ளது.

##~~##
இத்தீர்மானம் மார்ச் 3 ஆவது வாரத்தில் கொண்டுவரப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன்,  இலங்கை ராணுவத்தினரால் பிடித்து வைத்துக்கொல்லப்பட்டதற்கான போர்க்குற்ற  ஆதராங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிலையில்,இது அமெரிக்கா  கொண்டு வர திட்டமிட்டுள்ள போர் குற்றம் தொடர்பான தீர்மானத்திற்கு மேலும் வலு  சேர்ப்பதாக அமையும் என்றும், இதனால் இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும்  என்றும் கூறப்படுகிறது.