Published:Updated:

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை எதிர்ப்பு!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை எதிர்ப்பு!
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை எதிர்ப்பு!
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை எதிர்ப்பு!

ஜெனிவா: தமிழர் பிரச்னையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அனுமதிக்கக்கூடாது என ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே எதிர்ப்பு தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக அந்த நாட்டுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் வரும் நிலையில்,சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் கூடியுள்ள ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டம், பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசிய இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே, இலங்கை தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

அவர் பேசுகையில்,"இலங்கையில் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக உள்நாட்டுப்போர் முடிவுற்றுள்ளது.இலங்கையில் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் பணியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் செயல்படுத்தப்படுகிற மறுவடிவமைப்பு,மறுகுடியேற்றம், பழைய நிலைக்கு கொண்டு வருதல், மறுமுழுமையாக்குதல், நல்லிணக்கத் திட்டம் ஆகியவை, நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது.

சேனல்–4 காட்சிகள்


##~~##
நல்லிணக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டது. எங்கள் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதை அரசு அறியும். நாட்டின் நாலாபக்கத்திலும் போரினால் பாதிப்பு அடைந்தோம். 2009–ல் போர் முடிந்த பின்னர் நல்லிணக்கப்பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளோம்.பொறுப்பு ஏற்பது தொடர்பாக போரினால் கற்ற பாடங்கள், நல்லிணக்க குழு செய்த பரிந்துரை புறக்கணிக்கப்படவில்லை. பொதுமக்கள் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சேனல்–4 டி.வி. காட்சிகள் தொடர்பாக ஆராய ராணுவ விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இப்போது இரண்டாவது வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் குறித்தும் (பாலச்சந்திரன் படுகொலை) ஆராயும். திரிகோணமலையில் 5 மாணவர்கள், 17 ஏ.சி.எப். தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் விசாரணை நடக்கிறது.போரினால் கற்ற பாடங்கள், நல்லிணக்க குழு செய்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு தேர்தல்
நாடாளுமன்ற தேர்வுக்குழுதான், அரசியல் சட்ட சீர்திருத்ததங்களை செய்ய வேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வேண்டும். தேசியஅளவில் பொதுக்கருத்தும் எட்டப்படவேண்டும்.வடக்கு பகுதியில் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும்.
தீர்மானம் அனுமதிக்கக்கூடாது
இத்தனையையும் மீறி மேற்கத்திய நாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்கள் இலங்கையில் நடந்துவருகிற நல்லிணக்க நடவடிக்கைகள், அமைதி செயல்பாடுகளை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் தவறான தகவல்களுக்கு, நிர்ப்பந்த தந்திரங்களுக்கு சர்வதேச சமுதாயம் இரையாகி வருவதும் வருத்தம் அளிக்கிறது.இலங்கையில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கென்று, இந்த மன்றத்தில் நியாயமற்ற, ஒருபட்சமான, கொள்கையற்ற, நியாயமற்ற எந்த ஒரு அணுகுமுறையை மேற்கொள்வதற்கும் நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது தொடர்பான விவாதத்தையும், தீர்மானத்தையும் அனுமதிக்கக் கூடாது.
இலங்கை உள்நாட்டுப் பிரச்னைகளை தீர்ப்பது எங்கள் அடிப்படை பொறுப்பு ஆகும். இந்தப் பிரச்சினையை சர்வதேசப் பிரச்னை ஆக்குவது,இலங்கையில் நடைபெற்று வரும் நல்லிணக்க நடவடிக்கைகளை பலவீனப்படுத்தி விடும்" என்றார்.