Published:Updated:

இலங்கை விவகாரத்தில் ஐ.நா கடமை தவறிவிட்டது: நவநீதம் பிள்ளை

இலங்கை விவகாரத்தில் ஐ.நா கடமை தவறிவிட்டது: நவநீதம் பிள்ளை
இலங்கை விவகாரத்தில் ஐ.நா கடமை தவறிவிட்டது: நவநீதம் பிள்ளை
இலங்கை விவகாரத்தில் ஐ.நா கடமை தவறிவிட்டது: நவநீதம் பிள்ளை

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது ஐநா சபை கடமை தவறிவிட்டதாக ஐநா மனித உரிமைகள் கழக தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் பேசிய நவநீதம் பிள்ளை, போர்கள் மற்றும் பொருளாதார தேக்கநிலையால் கடைநிலையில் உள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறினார்.

தஞ்சம் புகுந்த நாட்டில் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்க இயலாத அவல நிலையில் அகதிகள் வாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில நாடுகளில் போரால் இறப்பவர்களைக் காட்டிலும் வன்முறை மற்றும் குற்றச்செயல்களால் அதிகமானோர் உயிரிழப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது, ஐநா சபை அமைப்பு ரீதியில் தோல்வியடைந்துவிட்டதாக நவநீதம் பிள்ளை குறிப்பிட்டார்.