Published:Updated:

மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது!

மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது!
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது!
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது!

மாலத்தீவு : இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலத்தீவு அதிபராக முகமது நஷீத் இருந்த போது, தலைமை நீதிபதி அப்துல்லா முகமது கைது செய்ய உத்தரவிட்டார்.

இது தொடர்பாக முகமது நஷீத் மீது ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 13 ஆம் தேதி தஞ்சமடைந்தார்.

இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவருக்கு இந்திய தூதரகம் புகலிடம் அளிப்பதை கைவிட்டு, அவரை ஒப்படைக்க வேண்டும் என்று மாலத்தீவு அரசு வலியுறுத்தியது.

இதுதொடர்பாக இந்திய தூதரகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

##~~##
இந்நிலையில், 11 நாட்களாக இந்திய தூதரகத்தில் தங்கியிருந்த நசீத், பிப்ரவரி 23 ஆம் தேதி தூதரகத்தை விட்டு வெளியேறினார். அவருடன் இருந்த எம்.பி.க்களும் வெளியேறினர். விசாரணைக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்து அவர் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று மாலியில் உள்ள தனது வீட்டில் இருந்த நசீத்தை போலீசார் கைது செய்தனர். அவருக்கு எதிராக கோர்ட் 3 ஆவது முறை பிறப்பித்த வாரண்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.