Published:Updated:

சேனல்- 4 க்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல் வழங்கவில்லை: கெல்லம் மெக்ரே மறுப்பு

சேனல்- 4 க்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல் வழங்கவில்லை: கெல்லம் மெக்ரே மறுப்பு
சேனல்- 4 க்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல் வழங்கவில்லை: கெல்லம் மெக்ரே மறுப்பு
சேனல்- 4 க்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல் வழங்கவில்லை: கெல்லம் மெக்ரே மறுப்பு

லண்டன்: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக சேனல்- 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப்படத்திற்கான ஆதாரங்களை  இலங்கையில் வசிக்கும் யாரும் வழங்கவில்லை என்று அப்படத்தை தயாரித்த கெல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார்.

சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்திற்கு ஆதாரம் வழங்கியவர்களை கைது செய்யப் போவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, கொழும்பிலிருந்து வெளியாகும், 'திவ்யன' என்ற நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆவணப்படத்திற்கான ஆதாரங்களை இலங்கையை சேர்ந்த யாரும் வழங்கவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மெக்ரே," இலங்கையில் வசிக்கும் எந்த பொது மகனும் சேனல்- 4 க்கு ஆதாரங்களை வழங்கவில்லை. அத்துடன் இந்த ஆதாரங்களை திரட்டுவதற்கு சேனல்- 4 தொலைக்காட்சி யாருக்கும் நிதி வழங்கவும் இல்லை.

##~~##
இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற விதத்தை கொண்டு அரசாங்கம் அச்சுறுத்தல்களை மேற்கொள்வது முறையற்றது.
குறிப்பிட்ட விடியோவின் உண்மைத்தன்மையால் உலக நாடுகளின் கண்கள் தற்போது இலங்கையின்மீது கவனம் செலுத்தியுள்ளன. பொதுநலவாய நாடுகளும் இலங்கையில் தமது மாநாட்டை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக ஆராய்கிறது" என்று கூறியுள்ளார். 
 இதனிடையே இந்த விடியோ தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ' நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் மறைக்க முற்படுவதால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளதையும் மெக்ரே மேற்கோள்காட்டியுள்ளார்.
-