Published:Updated:

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தாக்கல்!

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தாக்கல்!
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தாக்கல்!
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தாக்கல்!

ஜெனீவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் வரைவு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சில் மாநாடு கூடி நடந்து வருகிறது. இதில் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நாடுகள் சார்பிலும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த மாநாட்டில், இலங்கைக்கு எதிரான, அமெரிக்காவின் தீர்மான வரைவு, ஜெனீவாவில் நேற்று அதிகாரப்பூர்வமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. கொழும்பு கெசட் இணையத்தளம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

பேரவையின் உறுப்பினர்களுக்கு ஆவணங்கள் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் இந்த தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

##~~##
இந்நிலையில் விவாதங்களின்போது இந்த பிரேரணை வரைவில், மாற்றங்கள் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக, சர்வதேச  விசாரணைக்கு இந்த யோசனையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல், சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பேச்சு சுதந்திரம், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நீதித்துறையின் மீது நடத்தப்படும் அடக்குமுறை போன்றவை குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மீது உறுப்பு நாடுகள் விவாதம் நடத்தி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும். கூடுதலாக வாசகங்கள் சேர்ப்பது, நீக்குவது குறித்து யோசனை தெரிவிக்கப்படும். அதன் பிறகு தீர்மானம் தாக்கல் செய்யப்படும். வருகிற 22 ஆம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு அன்றே ஓட்டெடுப்பு நடை பெறும் என்று தெரிகிறது.
 
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் உள்ள 47 உறுப்பு நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
இந்தியா இன்னும் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த குரல் காரணமாக இந்தியா கடைசி நேரத்தில் ஆதரவு முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.