Published:Updated:

போதை பொருள்: விஜேந்தரிடம் 4 மணி நேரம் விசாரணை

போதை பொருள்: விஜேந்தரிடம் 4 மணி நேரம் விசாரணை
போதை பொருள்: விஜேந்தரிடம் 4 மணி நேரம் விசாரணை
போதை பொருள்: விஜேந்தரிடம் 4 மணி நேரம் விசாரணை

பஞ்சாப்: ஹெராயின் கடத்தப்பட்ட வழக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிடம் காவல்துறையினர் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பஞ்சாபில் கடந்த 7ஆம் தேதி 26 கிலோ எடையுள்ள, 130 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அனுப்சிங் என்பவர், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் மற்றும் அவரது நண்பர் ராம்சிங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ராம்சிங்கிடம் நடத்திய விசாரணையில், விஜேந்தர் சிங்குடன் சேர்ந்து மூன்று முறை ஹெராயின் போதைப் பொருளைப் தவறுதலாகப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

##~~##
இதையடுத்து, போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில்,பஞ்சாப் மாநில போலீசார், விஜேந்தரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது, போதைப் பொருள் கடத்தலில் தமக்குத் தொடர்பு இல்லை என விஜேந்தர் மறுத்ததாகத் தெரிகிறது.
இதனிடையே விஜேந்தர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.