Published:Updated:

புதிய போப் ஆண்டவர் 19ஆம் தேதி பதவியேற்பு

புதிய போப் ஆண்டவர் 19ஆம் தேதி பதவியேற்பு
புதிய போப் ஆண்டவர் 19ஆம் தேதி பதவியேற்பு

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவராக, புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் வரும் 19ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதனால்

புதிய போப் ஆண்டவர் 19ஆம் தேதி பதவியேற்பு

நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முதுமை காரணமாக போப் 16ஆம் பெனடிக்ட் கடந்த மாதம் 28ஆம் தேதி திடீரென பதவி விலகினார். இதையடுத்து, புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய ஓட்டுரிமை பெற்ற 115 கர்தினால்கள் வாடிகனுக்கு வந்தனர்.

பலத்த போட்டிக்கு இடையே 5வது சுற்றில் புதிய போப் ஆண்டவராக அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ (76) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் ஆண்டவர் ஆவார். ‘போப் ஆண்டவர் பிரான்சிஸ்’ என அழைக்கப்படுவார்.

##~~##
புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் வரும் 19ஆம் தேதி வாடிகனில் முறைப்படி பதவி ஏற்றுக்கொள்கிறார். தனது முதல் திருப்பலி வழிபாட்டையும் அவர் அன்று நடத்துகிறார்.
இந்த தகவலை வாடிகன் செய்தி தொடர்பாளர் பெடரிகோ லம்பார்டி அறிவித்துள்ளார். இந்த விழாவில் உலகமெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். புதிய போப் ஆண்டவர் பதவியேற்புக்கான விழா ஏற்பாடுகள் வாடிகனில்  முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.