Published:Updated:

``சித்திரவதையால் பாதிக்கப்படுவோர் பற்றி பள்ளி, கல்லூரி பாடங்களில் இடம் பெற வேண்டும்!" வழக்கறிஞர் சி.சே.ராசன்

``சித்திரவதையால் பாதிக்கப்படுவோர் பற்றி பள்ளி, கல்லூரி பாடங்களில் இடம் பெற வேண்டும்!" வழக்கறிஞர் சி.சே.ராசன்

சித்திரவதையால் பெரிதும் பாதிக்கப்படுவோர், சமூகத்தில் உள்ள அடிதட்டு மக்கள்தாம். அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.

`சித்திரவதையால் பாதிக்கப்பட்டோர் ஆதரவு தினம்' ஆண்டுதோறும் ஜூன் 26-ம் தேதி அன்று ஒரு சடங்கு போல அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு, சம்பந்தப்பட்ட தினத்தன்று, `தினசரி பல்வேறு வகைகளில் சித்திரவதைக்கு ஆளாகி வருவோர் மீது ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வை திரும்புவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?' என்பது பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. 'சமம் குடிமக்கள் இயக்கம்' சார்பில் இந்தக் கருத்தரங்கு சமீபத்தில் மதுரையில் நடத்தப்பட்டது.

கருத்தரங்கில் முக்கியமாக, 'பாகுபாட்டிற்கு எதிராகவும், சித்திரவதைக்கு எதிராகவுமான பாடங்களை பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்தால், மாணவர்களின் மனதில் சித்திரவதைக்குள்ளானவர்கள் பற்றிய நேர்மறை சிந்தனையை வளர்க்க முடியும். அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கலாம்' என்று வலியுறுத்தப்பட்டது.

சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.சே. ராசன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில், 'சித்திரவதைக்கு எதிரான பிரகடனம் மற்றும் இன்றைய சூழல்' பற்றி 'மூட்டா' பார்த்தசாரதி, 'சித்திரவதைக்கான தனிச் சட்டத்தின் அவசியம்' பற்றி  வழக்கறிஞர் கருணாநிதி, 'மதுப்பழக்கமும், குடும்ப சித்திரவதைகளும்' குறித்து சாவித்திரி, 'சாதிய பாகுபாடுகளும், கச்சநத்தம் பிரச்னையும்' பற்றி வழக்கறிஞர் வையவன், 'குழந்தைகள் மீதான சித்திரவதை' பற்றி கவிதா ஆகியோர் விரிவாகப் பேசினார்கள். மேலும் 'காவல் நிலைய சித்திரவதைகள்' பற்றி சண்முகவேலு ஆகியோர் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். 

``சித்திரவதையால் பாதிக்கப்படுவோர் பற்றி பள்ளி, கல்லூரி பாடங்களில் இடம் பெற வேண்டும்!" வழக்கறிஞர் சி.சே.ராசன்

சித்திரவதையால் பெரிதும் பாதிக்கப்படுவோர், சமூகத்தில் உள்ள அடிதட்டு மக்கள்தான். அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், தலித்துகள், மத சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பயம் காரணமாக சட்ட நடவடிக்கையில் ஈடுபடாமல் மௌனம் காக்கின்றனர். இதையே சித்திரவதை செய்பவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் மீண்டும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் அவலம் நடக்கிறது. சித்திரவதை என்பது ஒரு சமூகக் குற்றம். மனிதத் தன்மையற்ற முறையிலான பாகுபாட்டினாலும், காவல் சித்ரவதைகளாலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். சிலர் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். இச்செயல்கள் யாவும் அடிப்படை மனித உரிமைகளையும், மனித மாண்புகளையும் மீறும் செயல்களாகும் என்ற கருத்துக்கள் இதில் முன்வைக்கப்பட்டன.

மேலும் அரசின் பார்வைக்கு கொண்டுசெல்லும் வகையில் முக்கியமான தீர்மானங்களும் இந்தக் கருத்தரங்கில் இயற்றப்பட்டன. அதுபற்றி 'சமம் குடிமக்கள் இயக்க' வழக்கறிஞர் சி.சே.ராசன், ''சிறப்பாக நடந்த கருத்தரங்கில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சி அளிப்போரையும் பாதுகாக்கும் வகையில், சித்திரவதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தியா கையெழுத்திட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. பிரகடனத்தை நம் நாட்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் உடனடியாக ஏற்புறுதி செய்யவேண்டும், கச்சநத்தம் படுகொலைச் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யவேண்டும். மதுப்பழக்கத்தால் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தவேண்டும், பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் பாகுபாட்டிற்கு எதிராகவும், சித்திரவதைக்கு எதிராகவும் பாடங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதை அரசின் பார்வைக்கு அனுப்பவுள்ளோம்'' என்றார்.