Published:Updated:

இலங்கையில் மனித உரிமை நிலை : ஐ.நா.வில் தாக்கல்!

Vikatan Correspondent
இலங்கையில் மனித உரிமை நிலை : ஐ.நா.வில்  தாக்கல்!
இலங்கையில் மனித உரிமை நிலை : ஐ.நா.வில் தாக்கல்!
இலங்கையில் மனித உரிமை நிலை : ஐ.நா.வில்  தாக்கல்!

இலங்கையில் மனித உரிமை நிலை குறித்த காலமுறை ஆய்வறிக்கை ஐ.நா மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கல் செய்யப்படும் இந்த அறிக்கையை இலங்கை அமைச்சரும், ஐநா.,வுக்கான இலங்கையின் சிறப்புத் தூதருமான மகிந்த சமர சிங்கே சமர்ப்பித்தார்.

மனித உரிமையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டங்களை இலங்கை அரசு செயல்படுத்தி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போருக்குப் பின்னர் 3 லட்சம் அப்பாவித் தமிழர்கள் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும், காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தஞ்சமடைவோர் குறித்த விவரங்களை தெரிவித்தால் காணாமல் போனவர்களைக் கண்டறிவது எளிதாக இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
2010ல் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மறுவாழ்வு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதாகவும், ஐநா அமைப்பின் பரிந்துரைகளைச் செயல்படுத்த காலக்கெடு நிர்ணயித்து இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காலமுறை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேனல் 4 வீடியோ காட்சிகளில் வெளியான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், போர்க்காலத்தில் நடைபெற்ற சித்ரவதை நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதைத் தடுக்க பெண் காவலர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு தரப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.