Published:Updated:

இலங்கை அரசால் நீதி கிடைக்காது: மகனை இழந்தவர் கண்ணீர்

Vikatan Correspondent
இலங்கை அரசால் நீதி கிடைக்காது: மகனை இழந்தவர் கண்ணீர்
இலங்கை அரசால் நீதி கிடைக்காது: மகனை இழந்தவர் கண்ணீர்
இலங்கை அரசால் நீதி கிடைக்காது: மகனை இழந்தவர் கண்ணீர்

இலங்கை அரசால் தங்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என  சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் பிரதிநிதியும், இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டவருமான காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்தார்.

ஜெனிவா மாநாட்டில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காசிப்பிள்ளை மனோகரன், கடந்த 2006 ஜனவரி 2ஆம் தேதி, இலங்கை ராணுவத்தினர், எனது மகனை திரிகோணமலை கடலோரத்தில் சுட்டுக் கொன்றனர் என்றும் அது குறித்து நீதி கேட்டதற்காக எனது குடும்பத்தினர் இலங்கையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

##~~##
இதற்கு மேல் இந்த அறிக்கையை என்னால் தொடர முடியவில்லை என்று கூறியு காசிப்பிள்ளை, எனது மகனை இழந்ததால் ஏற்பட்ட வலி, வேதனையுடன் உங்களிடம் உதவி கேட்கிறேன் என்றார்.
மனித உரிமை ஆணையம் இந்த கொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஏனென்றால் இலங்கை அரசால் எனக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கண்ணீர் மல்க காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்த கருத்துகள் சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.