Published:Updated:

படமும்...செய்தியும்!

படமும்...செய்தியும்!
படமும்...செய்தியும்!

* இரண்டு நாள் பயணமாக புது டெல்லி வந்த எகிப்து நாட்டின் ஜனாதிபதி முஹமது மோர்ஸியை பிரதமர் மன்மோகன் சிங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் வரவேற்றனர்.
 

படமும்...செய்தியும்!



* சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம், அதை அடுத்த ஏற்பட்ட சுனாமி..அதன் தொடர்ச்சியாக ஃபுக்கோஷிமா அணு சக்தி நிலையத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. இப்போது அந்த அணுமின் நிலையத்தில் உள்ள சுவிட்ச் போர்டு பழுது பட்டதால் அணு உலைக்குத் தேவையான எரிப்பொருளை சேமிக்கும் இடத்தை குளிர்விக்க வைக்க முடியவில்லை.
 

படமும்...செய்தியும்!



அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் போப் ஆண்டவராக பதவி ஏற்றுக் கொண்டார். வாடிகன் நகரில் இருக்கும் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இருக்கும் தேவாலயத்தில் உலக தலைவர்கள்  உட்பட லட்சக்கணக்கான கத்தோலிக்க மக்களின் முன்னிலையில் இந்த பதவி ஏற்பு பிராத்தனைக் கூட்டம் நடைபெற்றது.
 

படமும்...செய்தியும்!



55 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா முடிவடைந்து அங்கிருந்து பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில் அவர்கள் விட்டு சென்ற குப்பைகளை எல்லாம் அகற்றும் பணி அங்கே நடைபெற்று வருகிறது. அகற்ற முடியாத அளவுக்கு சில இடங்களில் குப்பை சேர்ந்து கிடப்பதால் அவற்றை ஆங்காங்கே எரிக்கின்றனர்.

படமும்...செய்தியும்!

படங்கள்: ஏ.பி.