Published:Updated:

இன்று பாகிஸ்தான் திரும்புகிறார் முஷாரப்

இன்று பாகிஸ்தான் திரும்புகிறார் முஷாரப்
இன்று பாகிஸ்தான் திரும்புகிறார் முஷாரப்
இன்று பாகிஸ்தான் திரும்புகிறார் முஷாரப்

துபாய்: 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று நாடு திரும்புகிறார்.

1999 ஆண்டில் நவாஸ் ஷெரீப் அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த முஷாரப், 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, புதிய அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அவர் பாகிஸ்தானை விட்டு  வெளியேறி துபாயில் குடியேறினார்.

##~~##
இந்த நிலையில், மே மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடப்பதையொட்டி இன்று நாடு திரும்புவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதற்காக பாகிஸ்தான் நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு வழக்குகளில் அவருக்கு முன்ஜாமீன் பெறப்பட்டுள்ளது. அவர் நாடு திரும்பினால் சுட்டுக் கொல்வோம் என்று தலிபான் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, அவர் நாடு திரும்புகிறார்.
தலிபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி இன்று பாகிஸ்தான் திரும்ப இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் நாடு திரும்புவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.