Published:Updated:

பிரபாகரன் மனைவி, மகள் இறந்துவிட்டனர்: சரத் பொன்சேகா சொல்கிறார்

பிரபாகரன் மனைவி, மகள் இறந்துவிட்டனர்: சரத் பொன்சேகா சொல்கிறார்
பிரபாகரன் மனைவி, மகள் இறந்துவிட்டனர்: சரத் பொன்சேகா சொல்கிறார்

கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரது உடலையும் ராணுவம் கைப்பற்றியது என்று அப்போது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 

பிரபாகரன் மனைவி, மகள் இறந்துவிட்டனர்: சரத் பொன்சேகா சொல்கிறார்

கடந்தவாரம் கொழும்பில் நடந்த அயல்நாட்டு பத்திரிகையாளர்கள் சங்க கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், 'பிரபாகரனின் மனைவி மதிவதனி, 20 வயது மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரது உடல் 2009ம் ஆண்டு மே 20ம் தேதி கைப்பற்றப்பட்டது. இவர்கள் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன. இந்தப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்களும் கிடந்தது.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது மே 18ம் தேதி பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனியின் உடலை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுத்தோம். மேலும் மூத்த தலைவர்கள் பி.நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபடி மிகப்பெரிய அளவில் வெடி விபத்தை ஏற்படுத்தி இவர்கள் இறந்ததாக கூறப்பட்டது" என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.