Published:Updated:

சென்னையிலுள்ள துணைத் தூதரகம் இடமாற்றமா?: இலங்கை அரசு மறுப்பு!

சென்னையிலுள்ள துணைத் தூதரகம் இடமாற்றமா?: இலங்கை அரசு மறுப்பு!
சென்னையிலுள்ள துணைத் தூதரகம் இடமாற்றமா?: இலங்கை அரசு மறுப்பு!
சென்னையிலுள்ள துணைத் தூதரகம் இடமாற்றமா?: இலங்கை அரசு மறுப்பு!

கொழும்பு: சென்னையில் இயங்கும் இலங்கை துணைத் தூதரகத்தை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இடம்மாற்றவிருப்பதாக வெளியான செய்தியை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், அனைத்தும் வதந்தி என்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ரொட்டனி பெரேரா தெரிவித்தார். அவ்வாறு எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லையென்றும், இலங்கைத் துணை தூதரகத்தை இடமாற்ற வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் மேலும் கூறினார்.

##~~##
சென்னையில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்ற, இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.