Published:Updated:

இந்தியாவுடன் ஆலோசித்து தான் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தயாரித்தோம்: அமெரிக்கா

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவுடன் ஆலோசித்து தான் தயாரித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக், பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை இந்தியாவுடன் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தீர்மானத்தில் இந்தியா திருத்தங்கள் கொண்டு வந்ததாக கூறியுள்ள ராபர்ட் பிளேக், என்னென்ன திருத்தங்கள் என்பதை தெரிவிக்கவில்லை என்றார்.

அதேநேரத்தில் இந்தியா செய்த திருத்தங்களை வரவேற்பதாக கூறிய ராபர்ட் பிளேக், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது முக்கியமானது என்றார்.

##~~##
ஐ.நா மனித உரிமை அவையில் கொண்டு வந்தது நடுநிலையான தீர்மானம் என்று சுட்டிக் காட்டிய ராபர்ட் பிளேக், அதை நீர்த்துப் போன தீர்மானம் என கூறுவதையும், நீர்த்துப் போக இந்தியாவே காரணம் என்ற புகாரையும் மறுத்தார்.
இலங்கையை இரண்டாகப் பிரிக்க அமெரிக்கா முயல்வதாக கூறப்படுவதையும் மறுத்த அவர், அந்நாட்டில் தொடரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தங்களின் நோக்கம் என்றார்.
அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த இலங்கை அரசு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ராபர்ட் பிளேக் வலியுறுத்தினார்.