Published:Updated:

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தாக்கப்படுவார்கள்: சிங்கள கட்சி மிரட்டல்!

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தாக்கப்படுவார்கள்:  சிங்கள கட்சி மிரட்டல்!
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தாக்கப்படுவார்கள்: சிங்கள கட்சி மிரட்டல்!
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தாக்கப்படுவார்கள்:  சிங்கள கட்சி மிரட்டல்!

கொழும்பு: தமிழகத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான போராட்டம் மற்றும் இலங்கையின் புத்த பிட்சுகள் மீதான தாக்குதல்கள் காரணமாக, எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெற்றால், அதற்கு இந்திய மத்திய அரசே முழுப் பொறுப்பேற்கவேண்டும்.என்று சிங்கள கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய என்ற சிங்களவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சிங்கள ராவய அமைப்பின் தலைவருமான அக்மீமன தயாரத்ன தேரர், இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

இறையாண்மைமையுள்ள நாடான இலங்கையை, தமது தலையாட்டி பொம்மையாக்க தமிழ்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எம்மால் ஒருபோதும் அனுமதிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது. இவ்விவகாரம் இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டுக்குச் செல்லும் இலங்கையின் பௌத்த பிக்குகளும், பௌத்தர்களும் தாக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, இலங்கையிலுள்ள சிங்களவர்கள் எவரும் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்றும் அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

##~~##
இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது? புத்தர் பிறந்த புனித பூமிதான் இந்தியா. அங்கு சென்றுவருவதற்கு பௌத்தர்களுக்கு உரிமை உள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியா என்பது எமது அயல் நட்பு நாடு. வரலாற்றுக் காலம் முதல் உறவுகளைப் பேணும் நாடு. இந்தியாவுக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டால் அது எமக்கும் தாக்கத்தைச் செலுத்தும்.
தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிராக எழுகின்ற எதிர்ப்புகளால், இலங்கை இந்திய உறவில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு நாம் இடமளிக்க முடியாது. இலங்கை என்பது ஓர் இறையாண்மையுள்ள நாடு.
எமக்கேற்ற வகையில்தான் நாம் இங்கு செயற்படவேண்டும். இருப்பினும், தமது ஏவல்களுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படும் தலையாட்டி பொம்மையாக எம்மை மாற்ற தமிழ்நாடு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், யுத்தத்திற்கு பிறகு இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் அனைத்து சிறப்புரிமைகளுடனும் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.எந்த மக்களையும் பாரபட்சத்துடன் அரசு நடத்தவில்லை. இவ்வாறான நிலையில், தமிழ்நாட்டிலுள்ளவர்கள் ஏன் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்?
இலங்கையின் பௌத்த பிக்குகளும், பௌத்தர்களும் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது தொடர்வதால், எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கட்டவிழ்க்கப்பட்டால் அதற்கு இந்திய மத்திய அரசே முழுப் பொறுப்பேற்கவேண்டும்.
எனவே, எதிர்கால நலனையும், இலங்கை இந்திய நட்புறவையும கருத்திற்கொண்டு இலங்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.