Published:Updated:

சுயநலத்திற்காக போராட்டம் நடத்தும் தமிழ் நடிகர்கள் - இலங்கை நடிகர் தாக்கு

கொழும்பு: ஈழப் பிரச்னைக்காக தமிழ் திரைப்படத் துறையினர் சென்னையில் தன்னெழுச்சியாக உண்ணாவிரதம் இருந்தனர். ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் கமல், ரஜினி கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடக்க இருக்கும் நிலையில், சிங்கள திரைத்துறையினர் இதை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

##~~##
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரபல சிங்கள திரைப்பட நடிகர் ரவீந்தர ரந்தெனியா, 'தமிழகத்தில் சினிமா நடிகர்களும் அங்குள்ள‌ அரசியல்வாதிகளைப் போல சுயநலத்துக்காக போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் இந்த செயல் வருத்தமளிக்கிறது'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.