Published:Updated:

யு.எஸ். ராணுவ நிலைகளைத் தாக்கத் தயாராகும் வட கொரியா!

யு.எஸ். ராணுவ நிலைகளைத் தாக்கத் தயாராகும் வட கொரியா!
யு.எஸ். ராணுவ நிலைகளைத் தாக்கத் தயாராகும் வட கொரியா!
யு.எஸ். ராணுவ நிலைகளைத் தாக்கத் தயாராகும் வட கொரியா!

சியோல்/ வாஷிங்டன்: பசிபிக் மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை ஏவுகணைகள் மூலம் தாக்குவதற்கு வட கொரியா தயார்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் இருந்து அணு ஆயுதங்களைத் தாங்கிய இரண்டு போர் விமானங்கள் வட கொரியாவில் வட்டமிட்டன. போர் ஒத்திகைக்காக இது நடந்தது எனத் தெரிகிறது.

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பதிலடித் தரும் வகையில் வட கொரியா இப்போது அதிரடி நடவடிக்கைகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தும் வகையில் தனது ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான உத்தரவில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங்-உன் கையெழுத்திட்டதாக, அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா உடனான கணக்கைத் தீர்த்துக்கொள்வதற்கான தருணம் நெருங்கிவிட்டதாக, வட கொரியா கடுமையாக எச்சரித்துள்ளது, சர்வதேச அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.