Published:Updated:

கச்சத்தீவு முடிந்து போன பிரச்னை - அடுத்த சர்ச்சையை கிளப்புகிறார் கரியவாசம்

கச்சத்தீவு முடிந்து போன பிரச்னை - அடுத்த சர்ச்சையை கிளப்புகிறார் கரியவாசம்
கச்சத்தீவு முடிந்து போன பிரச்னை - அடுத்த சர்ச்சையை கிளப்புகிறார் கரியவாசம்
கச்சத்தீவு முடிந்து போன பிரச்னை - அடுத்த சர்ச்சையை கிளப்புகிறார் கரியவாசம்

கொழும்பு: ''சிங்களர்கள் இந்திய வம்சாவழிகளே" என நெருப்பைக் கக்கி இருந்த இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், 'கச்சத்தீவு முடிந்து போன பிரச்னை அந்தப் பிரச்னையை இப்போது எழுப்பத் தேவையில்லை" என அடுத்த சர்ச்சைக்கு அடுப்பைப் பற்றவைத்திருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழக மாணவர்களின் தொடர் போராட்டங்கள், மறியல், கடையடைப்பு என கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெளித்து வருகிறார் கரியவாசம்.

##~~##
இன்று அவர் அளித்த பேட்டியில், ''இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் தென் பகுதியோடும், சிங்களவர்களுக்கு வடகிழக்கு பகுதியோடும் தொடர்பு இருக்கிறது; இதை மறுக்க முடியாது. அப்படி குடியேறியவர்களுக்கு அப்போதே அரசாளும் உரிமை இருந்தது. இப்போது அனைவரும் இலங்கை குடிமக்களாக இருக்கிறோம். கச்சதீவு பிரச்னையில் கடந்த 1974 மற்றும் 1976 ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படியே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எனவே, அந்தப் பிரச்னையை இப்போது மீண்டும் எழுப்ப வேண்டிய அவசியமில்லை"" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக பேசியவர், ''சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. விளையாட்டையும்  அரசியலை ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்க்கக் கூடாது" என்றும் கூறியுள்ளார்.
கரியவாசம் இன்னும் என்னென்ன விஷயத்தைக் கக்கக் போகிறாரோ!