Published:Updated:

கிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்: 15 பேர் காயம்!

கிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்: 15 பேர் காயம்!
கிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்: 15 பேர் காயம்!

கொழும்பு: கிளிநொச்சியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத கும்பல் இன்று நடத்திய தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினரே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சரவணபவன் ஆகியோர் இன்று மதியம் 12 மணி அளவில் பொது மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்: 15 பேர் காயம்!

இத்தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தேசிய கொடிகளுடன், முகங்களை மூடிக் கொண்டு வந்த சிலரே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனைக் கொச்சைப் படுத்தும் வார்த்தைகளை கூறியவாறே, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

##~~##
இச்சம்பவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவர்களது பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தாக்குதல் சம்பவம் நடைபெற்ற அரை மணி நேரம் கழித்தே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய இரண்டு பேரை பொது மக்கள் பிடித்து காவற்துறையினரிடனம் ஒப்படைத்த போதும், அவர்களை பின்னர் காவற்துறையினர் விடுவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இத்தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கை ராணுவப் புலனாய்வாளர்கள்தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.