Published:Updated:

இந்தியாவுக்கு வருகிறது ஒட்டக பால் ஐஸ்க்ரீம்

இந்தியாவுக்கு வருகிறது ஒட்டக பால் ஐஸ்க்ரீம்
இந்தியாவுக்கு வருகிறது ஒட்டக பால் ஐஸ்க்ரீம்
இந்தியாவுக்கு வருகிறது ஒட்டக பால் ஐஸ்க்ரீம்

எமிரேட்ஸ்: இதுவரை பக்ரித் பண்டிகைக்கு குர்பானி கொடுக்க ஒட்டகத்தைக்தான் இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள். இனிமேல் ஒட்டக பாலும் இந்தியாவுக்கு வரப் போகிறது.

ஒட்டக பாலிலிருந்து தயாராகும் பால்கோவ, தயிர், ஐஸ் க்ரீம் உள்ளிட்ட பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்தார்கள்.

ஒட்டக பாலிற்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வறிக்கைகள் சொல்லப்பட்டதை அடுத்து ஒட்டக பால் பொருட்களுக்கு எமிரேட்ஸில் நல்ல கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.

##~~##
இதையடுத்து, ஒட்டக பால் உற்பத்தியை அதிகப்படுத்தி, ஒட்டக பால் பொருட்கள் வர்த்தகத்தை கடல் கடந்து செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது எமிரேட்ஸ். முதல்கட்டமாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளோடு இதற்கான வர்த்தக‌ ஒப்பந்தங்களை செய்திருக்கும் எமிரேட்ஸ், அடுத்த கட்டமாக இந்தியாவிலும் ஒட்டக பால் பொருட்களை சந்தைப்படுத்த தயாராகி வருகிறது.