Published:Updated:

படமும்...செய்தியும்!

படமும்...செய்தியும்!
படமும்...செய்தியும்!

அதற்குள் அடுத்த தேர்தலா?

நம்மை விட அமெரிக்கர்களுக்கு தேர்தல் என்றால் லட்டு சாப்பிடுவது மாதிரி. கடந்த ஜனவரி மாதம்தான் ஒபாமா இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அதற்குள் 2016ம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு அங்கே அரசியல் கட்சிகள் ஆயத்தம் ஆகி வருகின்றன.
 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்க ‘‘நாங்கள் ரெடி’’ என்ற பிரச்சாரத்தை ஹில்லாரி கிளிண்டன் ஆதரவாளர்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டனர். இதற்கான http://www.readyforhillary.com/ என்ற புதிய இணையத்தளத்துக்கு இப்போதே அவர்கள் பூஜை போட்டுவிட்டனர்.

படமும்...செய்தியும்!


 

‘பாவாடை படப்படப்பால்...’ உசுப்பேற்றப்படும் போர் வெறி?

தென் கொரியாவையும் வட கொரியாவையும் போர் மேகங்கள் சூழ்திருக்கும் நிலையில் தென் கொரிய அதிபரான பார்க் என்ற பெண்மணியை மறைமுகமாக கேவலப்படுத்தும் வகையில்,  ‘தென் கொரியாவின் பாவாடை படபடப்புகள் எல்லாம் எங்கள் முன் செல்லாது’ என்று வட கொரியா அடுத்த காமெண்ட் போர் சூட்டை கூட்டியிருக்கிறது.

படமும்...செய்தியும்!

‘அணு ஆயுத தாக்குதல் நடத்தி உங்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவோம்’ என்று வட கொரியா விடுத்த மிரட்டலுக்கு எழுந்த எதிர்பபைவிட, இந்த காமெண்ட் தென் கொரியாவை கொதிக்க வைத்திருக்கிறது. இதையடுத்து தன்நாட்டின் எல்லையில் போருக்கான ஒத்திகையை தென் கொரியா தீவிரப்படுத்தி இருக்கிறது.

படங்கள்: ஏ.பி.