Published:Updated:

இந்திய வம்சாவளி பெண்ணின் அழகு குறித்து புகழ்ந்ததற்கு மன்னிப்புக் கோரினார் ஒபாமா!

விகடன் விமர்சனக்குழு

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா மாகாண பெண் வழக்கறிஞர் தோற்றத்தை புகழ்ந்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு வழக்கறிஞர் கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளி பெண்ணான இவர்,  கடந்த வியாழனன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒபாமா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்தினரிடையே பேசிய ஒபாமா, ஹாரிஸ் ஒரு திறமைசாலி என்றும், அவர் தனது பணியை அர்ப்பணிப்புடன் செய்ய கூடியவர் என்றும், இவற்றையெல்லாம் தாண்டி நாட்டில் மிக சிறந்த தோற்றம் கொண்ட வழக்கறிஞராக திகழ்வதாகவும் கூறினார்.

##~~##
இதனைக் கேட்ட கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஆச்சரியம் அடைந்தனர்.  மற்றொரு புறம் பலத்த கைத்தட்டல் எழுந்தது.  ஆனால், இந்த பேச்சை தொடர்ந்து அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இணையதளங்களில் கண்டன குரல் எழுந்தன. 
இந்நிலையில், ஒபாமா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ஹாரிசிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார். மேலும், எந்த வழியிலும் ஹாரிசின் பணியினையோ அல்லது அவரது திறமையையோ குறைக்க அதிபர் ஒபாமா விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.