Published:Updated:

ராஜபக்ஷேவின் ஆக்ஸ்ஃபோர்டு உரை திடீர் ரத்து

Vikatan Correspondent

லண்டன், டிச.02,2010

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே வியாழக்கிழமை நடத்தவிருந்த சிறப்பு உரை திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ##~~##

இங்கிலாந்து வாழ் தமிழர்களின் தொடர் போராட்டம் மற்றும் வலியுறுத்தலைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷே உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக, ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு தனது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுவதற்காக ராஜபக்ஷே இங்கிலாந்து வந்ததையொட்டி, லண்டன் வாழ் தமிழர்கள் வன்மையாக கண்டித்து, விமான நிலையத்தில் மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அவர் உரை நிகழ்த்தவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த இங்கிலாந்து தமிழர் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் முடிவு செய்திருந்தன.

இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக ஆக்ஸ்ஃபோர்டு யூனியன் அறிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

முன்னதாக, இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான புதிய ஆதார வீடியோக்களை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது கவனத்துக்குரியது.