Published:Updated:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அஷரப் வேட்பு மனு தள்ளுபடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அஷரப் வேட்பு மனு தள்ளுபடி!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அஷரப் வேட்பு மனு தள்ளுபடி!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அஷரப் வேட்பு மனு தள்ளுபடி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷரப்பின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் வருகிற மே 11 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில், போட்டியிட முடிவு செய்த பிரதமர் ராஜா பர்வேஷ் அஷரப், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில்,  ராவல் பிண்டி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதனை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரி, அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்தார். பிரதமராகும் முன்பு அஷரப், கிலானி அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக  இருந்தபோது, அரசு பணத்தை தனது நலனுக்காக முறை கேடாக பயன்படுத்தியதாகவும், உறவினர்களுக்கு உயர்பதவிகள் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னாள் அதிபர் முஷரப்பின் சிட்ரால் தொகுதி வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே, முஷரப் கசூர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.